புதுச்சேரி அரசு - வேளாண்துறையின் (Agricultural Technology Management Agency ) இயற்கை வேளாண்மை கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியில் – SLI
இடம் : ஊசுடு- ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி: பிப்-22/ 2018
இயற்கை வேளாண்மையை புதுவை மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் கொண்டு செல்லவும், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டிய அரசுசார் பயிற்சி மற்றும் உதவிகள் குறித்தும் அவற்றில் உள்ள சவால்கள், பிரச்சனைகள் குறித்து நேரடி கருத்துக்களை தெரிவிக்கவும்.
இயற்கை விவசாயத்தை நாடும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உள்ள புரிதல் பற்றிய பல்வேறு நலம் சார்ந்த உறையாடல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சியில் புதுவை வேளாண்துறை அமைச்சர் திரு.கமலக்கண்ணன், ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி நிறுவனர் – திரு.விஜய்பாய், அபிவிருத்தி செயலர்-திரு.அன்பரசு, வேளாண் தலைமை இயக்குனர்- திரு.ராமமூர்த்தி, இணை இயக்குனர்- திரு.முருகேசன், KVK முதல்வர் - திரு.பாலகாந்தி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் – சிவராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பலரும் கலந்துகொண்டதோடு சிறப்புரையாற்றி பலரின் கேள்விகளுக்கும் விடைதந்து மகிழ்வித்தனர்.
கருத்து பரிமாற்றத்தில் SLI:
(கருத்துக்கள்: திரு.இலட்சுமிநாராயணன்)
இயற்கை விவசாயம் குறித்து பல விவசாயிகளுக்கு பயிற்சி தேவைப்படுவதை பலரும் தெரிவித்தனர். அதுகுறித்து இளம் விவசாயிகள், விவசாய ஆராய்ச்சி மாணவி, இயற்கை விவசாயத்தில் அனுபவம் வாய்ந்த புதுவையை சுற்றியுள்ள விவசாய முன்னோடிகள் மற்றும் திரு. பாபுராம் போன்ற பலரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள...
இயற்கை விவசாய பயிற்சிகளை தரமான முறையில் கொடுத்து கடந்த 3 வருடமாக 1800க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளை உருவாக்கி உள்ளது SLI. எனவும் மேலும் இந்நிறுவனத்தில் விவசாய இடுபொருள், பூச்சி விரட்டிகள், நாற்றங்கால் பயிற்சி என இயற்கை விவசாயதிற்கென பிரத்தியோகமாக 6 விதமாக பயிற்சிகள் நேரடி களபயிற்சியிலும், ஆரோவில் பண்ணைகளின் ஒத்துழைப்போடும் நடத்துகிறோம்...
தமிழகம் முழுக்க மாவட்டம்தோரும் பல விவசாயிகள் ஆண்கள் / பெண்கள் என பலன் அடைந்து உள்ளனர்.
உங்களுக்கும் பயிற்சி தேவைப்படுமாயின் உதவுகிறோம் எனவும் புதுச்சேரி அரசு எங்களோடு இணைந்து விவசாயிகளுக்கு பயிற்சி தர முன்வந்தால் இன்னும் சிறப்பாக, இன்னும் பிற இயற்கை விவசாயிகளை உருவாக்க காத்திருக்கிறோம் என வாழ்த்துக்களோடு கருத்துக்களை பரிமாறிக்கொண்டது.
No comments:
Post a Comment