கால்நடை வேளாண்மை : பராமரிப்பு, பால் மதிப்புக்கூட்டல், மூலிகைவழி கால்நடை மருத்துவம்...
கால்நடைகள் பராமரித்தல் மற்றும் மூலிகை வழி மருத்துவம்– என அறிமுக வகுப்போடு துவங்கிய சிறப்புவாய்ந்த இந்த பயிற்சியில்....
மாட்டு கொட்டகை அமைத்தல், மாடுகள் பராமரித்தல் மற்றும் தீவனம் தயாரித்தல் போன்ற வழக்கமான நடைமுறைகளை எவ்வாறு எளிய வழியில் கையாள்வது, செலவினங்களை கட்டுக்குள் கொண்டுவந்து வேலைப்பளுவை குறைப்பது உள்ளிட்ட முறைகளை அன்னபூர்ணா கால்நடை பண்ணையின் நேரடி பார்வை மற்றும் அங்குள்ள பயிற்றுநர்களின் ஆலோசனைகளை ஆர்வமாய் கேட்டு பயன்பெற்றனர்.
கால்நடைகளுக்கு மருத்துவம் செய்யும் முன் கால்நடைக்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றிய ஓர் விரிவான அலசலோடு விவாதிக்கப்பட்டு, பயிற்றுநர்கள் வாயிலாக தெரிவிக்க பட்டது. அதோடுகூடிய மருத்துவ மூலிகைகள் அறிமுகம் மற்றும் கொடுக்கும் முறை, அளவு, பயன்பாடு போன்ற தகவலும் செவ்வனே வழங்கப்பட்டது.
நேரடி பயிற்சியோடு கூடிய மூலிகை மருந்துகள் தயாரிப்பு கூடத்தில் பங்கேற்பாளர்களின் கைப்பட பாரம்பரிய முறையில் (அம்மி, உரல் என) மூலிகை மருந்துகள் தயாரித்தல் மற்றும் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்ககூடிய மசாலா உருண்டயை நடுக்குப்பம் பெண்கள் மையம் & அமிர்தா குழுவோடு இணைத்து கற்றுதெரிந்தனர்.
அதனை, மாடுகளுக்கான மருத்துவ முகாமில் மசால் உருண்டை, மத்தன் தைலம் போன்றவைகளை மாடுகளுக்கும் கொடுத்து மருத்துவ சேவை செய்தனர்.
பின்பு, கால்நடை தீவனம் அசோலா தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றியும், பால் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், பால் பொருட்கள் விற்பனை சாத்தியங்கள் & தொழில் திட்டமிடல் குறித்த செய்முறை பயிற்சியோடு விளக்கங்களை பெற்றதோடு ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு.. கருத்துக்களை பரிமாறிகொண்டனர்.
பயிற்றுநர்கள் : திரு. பாலா மற்றும் திருமதி. செல்வி, சேவா, மதுரை, திரு. தாமஸ், அமிர்தா குழு, திரு. லூர்து, Sun Farm குழு மற்றும் திரு. பார்த்தசாரதி
No comments:
Post a Comment