நீடித்த விவசாயம்- சிறுதானியங்கள்
5-7 March 2018
இயற்கை விவசாயத்தில் சிறுதானிய வேளாண்மை- இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிமுக வகுப்போடு தொடங்கிய இப்பயிற்சியில் பயிர் கடன் மற்றும் பயிர் காப்பிடு வழிகள் குறித்த விளக்கங்களும்
பண்ணை
பார்வையிடல் & சிறுதானிய சாகுபடி நுணுக்கங்கள் போன்றவை நேரடி
களத்தில் பயிற்றுவிக்கப்பட்டன.(சித்தார்த்தா பண்ணை, திரு. ஹெர்பர்ட்)
மேலும், இயற்கை வழி வேளாண்மை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
பற்றிய முழு விளக்கத்தோடுகூடிய நேரடியாக பங்கேற்பாளர்கள் முன்னிலையில் தெளிவாக
பயிற்றுவிக்கப்பட்டது.
சிறுதானிய
சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை
வாய்ப்புகள் மற்றும் தொழில்
திட்டமிடல் – இயற்கை வழி விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் என சிறுதானியம் பற்றிய விரிவான தரம்மிகு பயிற்சியின் நிறைவாக விவசாயிகள்
கருத்து பகிர்வு என ஆர்வமுடன் கற்று பங்கேற்பாளர்கள் விடைபெற்றனர்.
பயிற்றுனர்கள்: திரு.பார்த்தசாரதி, திரு. ஹெர்பர்ட், திரு. ராதாகிருஷ்ணன், ரோஸ், புதுக்கோட்டை
No comments:
Post a Comment