மூலிகைவழி மருத்துவம்
(ஆரோக்கிய உணவு, மூலிகை சார்ந்த அழகுசாதன பொருட்கள் )
01-03-2018
வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் என ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வோடு தொடங்கிய இப்பயிற்சியில் ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு வகைகள் அதன் முக்கிய அம்சங்கள் பற்றியும் மூலிகை வழி பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகள் – என எண்ணிற்ற யுக்திகளையும் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரின் ஆலோசனையோடும் நேரடி களப்பயிற்சியோடும் பகிரப்பட்டது.
அதோடு மூலிகை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி, மூலிகை மருந்துகள் செய்முறை பயிற்சி என தொழில் வாய்ப்புகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்பட்டது. அதோடு அதனை விற்பனை செய்ய அடிப்படை தேவையான Branding, Packaging and Labeling போன்றவற்றின் விளக்கங்கள் செயல்முறைகள் குறித்து தெளிவாக்கப்பட்டது.
மேலும், மூலிகை அறிமுகம் மற்றும் மூலிகை கண்டறிதல் – பூர்விகம் மூலிகை பண்ணை பார்வையிடல், தொழில் திட்டமிடல் – பயிற்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment