The Sustainable Livelihood Institute (SLI) is a joint initiative of the Tamilnadu Rural Livelihood Mission and Auroville Foundation.
Thursday, 22 March 2018
Saturday, 17 March 2018
Health Drink Production and Marketing: 12 – 14 March 2018
Health Drink Production and Marketing
12 – 14 March 2018
பயிற்சி அறிமுகம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்களின் ஆலோசனையோடு தொடங்கிய இப்பயிற்சியில்
குளிர்பானம் சந்தை – ஒரு அறிமுகம், ஆரோக்கிய பான தயாரிப்பு நிறுவனங்கள் பார்வையிடல் - Naturallement, Aurosoya and Auroamirtham என வணிகம் சார்ந்த புரிதல் பயிற்சி பின்பு குளிர் பானங்கள் தயாரித்தல், நிரப்புதல், குளிரச்செய்தல் என நேரடி கள பயிற்சியோடு கள ஆய்வு மற்றும் கருத்து கேட்டறிதல் மற்றும் தொகுத்தனர் பங்கேற்பாளர்கள்.
தொகுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்து சந்தைபடுத்துவதற்க்கான உத்திகளை உருவாக்குதல் போன்றவை தகுத்த விளக்கங்களோடு விவரிக்கப்பட்டன.
மேலும் விற்பனை அடிப்படை தேவைகளான, பெயரிடுதல் & வர்த்தக தொடர்புகள் : செயல் முறை விளக்கம் மற்றும் மாதிரி தயாரித்தல் என ஆர்வம்மிகுந்த பங்கேற்பாளர்கள் தயாரித்த குளிர்பானங்களை நேரடி கள ஆய்வு செய்ததோடு அது சார்ந்த சந்தைபடுத்துதல் மற்றும் உள்ளூர் சந்தைவாய்ப்புகளை தொடர்புபடுத்துதல், தொழில் திட்டமிடல் வளங்களை கண்டறிதல், தொழில் திட்டத்தை செயல்படுத்தல் போன்றவைகளையும் கற்றுதெளிந்தனர். அதோடுகூடிய குழு விவாதம் : குளிர்பான தொழில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் நடைபெற்றது.
திரு. பார்த்தசாரதி, Ms. பார்வதி, Ms. சாவித்திரி & திரு. குமார், திரு. ராமசுப்பிரமணியன், திரு. குமார் & திரு. மதன், & திரு. சத்யராஜ்
Monday, 12 March 2018
Community based Sustainable Enterprises 6-8 March 2018
Community based Sustainable Enterprises
6-8 March 2018
பங்கேற்பாளர் அறிமுகம் மற்றும் பயிற்சி குறித்த எதிர்பார்ப்புகள் & தேவைகள் என வெகுவான தேடலோடு தொடங்கிய இப்பயிற்சியில் குழு சார்ந்த தொழில்கள் தொடங்குதல் மற்றும் தொழில் பகுப்பாய்வு, தொழில் கூறுகள் (4 Ps and 5 Force) என தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரும் விசால விளக்கதொடும், விலை நிர்ணயம், சந்தைபடுத்துதல் – சந்தை அறிந்துகொள்ளுதல் என அடிப்படை யுக்திகள் விவரிக்கப்பட்டன. மேலும் Branding and Packaging - அறிமுகம் மற்றும் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்தும் குழு சார்ந்த தொழில் – நிகழாய்வு (லிஜ்ஜட் பப்பட்) என்ற நிறுவத்தின் தொழில் வளர்ச்சி பற்றியும் அமிர்தா மற்றும் மீரா – குழு சார்ந்த தொழில் தொடங்குதல் – அனுபவ பகிர்வு போன்ற பல்வேறு அறிய தகவலோடும்
பொருள்கள் தயாரிப்பு – நெறிமுறைகள், குழு தொழில் திட்டமிடல் மற்றும் Well paper & Aval – Social Enterprises நேரடி கள பார்வையிடல் என சிறப்பாக அமைந்தது இப்பயிற்சி.
பயிற்றுனர்கள்: திரு. ராமசுப்பிரமணியன், திரு. உலகநாதன், திரு.பார்த்தசாரதி, Ms. பார்வதி & திரு. சத்யராஜ்
Sustainable Agriculture - Millets - 1-3 March 2018
நீடித்த விவசாயம்- சிறுதானியங்கள்
5-7 March 2018
இயற்கை விவசாயத்தில் சிறுதானிய வேளாண்மை- இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிமுக வகுப்போடு தொடங்கிய இப்பயிற்சியில் பயிர் கடன் மற்றும் பயிர் காப்பிடு வழிகள் குறித்த விளக்கங்களும்
பண்ணை
பார்வையிடல் & சிறுதானிய சாகுபடி நுணுக்கங்கள் போன்றவை நேரடி
களத்தில் பயிற்றுவிக்கப்பட்டன.(சித்தார்த்தா பண்ணை, திரு. ஹெர்பர்ட்)
மேலும், இயற்கை வழி வேளாண்மை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
பற்றிய முழு விளக்கத்தோடுகூடிய நேரடியாக பங்கேற்பாளர்கள் முன்னிலையில் தெளிவாக
பயிற்றுவிக்கப்பட்டது.
சிறுதானிய
சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் விற்பனை
வாய்ப்புகள் மற்றும் தொழில்
திட்டமிடல் – இயற்கை வழி விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் என சிறுதானியம் பற்றிய விரிவான தரம்மிகு பயிற்சியின் நிறைவாக விவசாயிகள்
கருத்து பகிர்வு என ஆர்வமுடன் கற்று பங்கேற்பாளர்கள் விடைபெற்றனர்.
பயிற்றுனர்கள்: திரு.பார்த்தசாரதி, திரு. ஹெர்பர்ட், திரு. ராதாகிருஷ்ணன், ரோஸ், புதுக்கோட்டை
Friday, 9 March 2018
Herbs for Health - Health food, Medicine and Cosmetics preparation: 1-3 March 2018
மூலிகைவழி மருத்துவம்
(ஆரோக்கிய உணவு, மூலிகை சார்ந்த அழகுசாதன பொருட்கள் )
01-03-2018
வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் என ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வோடு தொடங்கிய இப்பயிற்சியில் ஆயுர்வேதத்தில் உடல் அமைப்பு வகைகள் அதன் முக்கிய அம்சங்கள் பற்றியும் மூலிகை வழி பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகள் – என எண்ணிற்ற யுக்திகளையும் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரின் ஆலோசனையோடும் நேரடி களப்பயிற்சியோடும் பகிரப்பட்டது.
அதோடு மூலிகை அழகு சாதன பொருட்கள் செய்முறை பயிற்சி, மூலிகை மருந்துகள் செய்முறை பயிற்சி என தொழில் வாய்ப்புகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்பட்டது. அதோடு அதனை விற்பனை செய்ய அடிப்படை தேவையான Branding, Packaging and Labeling போன்றவற்றின் விளக்கங்கள் செயல்முறைகள் குறித்து தெளிவாக்கப்பட்டது.
மேலும், மூலிகை அறிமுகம் மற்றும் மூலிகை கண்டறிதல் – பூர்விகம் மூலிகை பண்ணை பார்வையிடல், தொழில் திட்டமிடல் – பயிற்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
Subscribe to:
Posts (Atom)
-
Seminar & Discussion The Seminar on Sustainable Livelihoods, understanding recent reports was organized on the sidelines ...
-
A team from Mahalir Thittam, Erode consists of Mr A. Srinivasan, Project Director, Mahalir Thittam, APOs, staffs and Cluster Facilitat...
-
Deepika and many other seed savers will be there at Bharat Nivas on 28th July 2018 for the SLI 2nd Seed Festival. Do join us for the sa...