Friday, 11 May 2018

Wellness Consultant – Advanced (07 - 14 May 2018)



                                                                                                                                    07 – 11 May 2018 




ஆரோக்கியத்தோடு கூடிய வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் பற்றிய மென்மை நிறைந்த விளக்கங்களோடு தொடங்கிய இப்பயிற்சியில், 

மூலிகை வழி அழகு நிலையம் - தொழில் திட்டமிடல் – Group Exercise,

மூலிகை சார்ந்த அழகு கலை பயிற்சி – அழகு பராமரிப்பு,

யோகா & AVIVA,

அழகு நிலையம் பார்வையிடல் என நீண்ட இப்பயிற்சியில் சிறப்பு மிக்க அழகுக்கலை யுத்திகளையும், தொழில் நுணுக்கம் அடங்கிய, இயற்கைசார் அழகு கலை நிறைந்த மணப்பெண் அலங்காரம், பூமாலை தொடுத்தல், சிகை அலங்காரம், ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல... தொகுப்புகளாய் கொண்டுசெல்லப்பட்டது..

அதோடுகூடவே, நம் உடலை பேணிகாக்கும் வகையில், Season based Health and Beauty care management என்ற சிறப்பு வகுப்பும், பங்கேற்பாளர்கள் கற்றுதெளிந்த நிலை அறிய Practical தேர்வும், பங்கேற்பாளர்களை ஊக்குவிக்க சான்றிதழ் அடங்கிய எழுத்து தேர்வும் இப்பயிற்சியில் மெருகேற்றப்பட்டது.

பயிற்சியின் நிறைவாக Feedback and Certificate distribution வழங்குதலோடு... சிறப்புற அமைத்தது அழகு கலை பயிற்சி.


பயிற்றுநர்கள்: Dr. தமிழ்செல்வி, திரு. பார்த்தசாரதி, Ms. முத்துகுமாரி, Dr.லோகநாதன், Ms. கவிதா (அழகு கலை நிபுணர்), Dr. Bee, Ayurvedic Practitioner & Ms.பவித்ரா























Friday, 4 May 2018

PRINCIPLES OF SUSTAINABLE AGRICULTURE – Focus on Community Supported Agriculture (CSA) (02 to 04/05/2018)



PRINCIPLES OF SUSTAINABLE AGRICULTURE 

– Focus on Community Supported Agriculture (CSA) 

(02 to 04/05/2018) 



பங்கேற்பாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் Mindfulness செயல்களோடு துவங்கிய... இப்பயிற்சியில் இயற்கை விவசாயத்தில் - இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள் பற்றிய விரிவான அலசலோடும் 

          சமூக குழு சார்ந்த வேளாண்மை 

          பண்ணை வடிவமைப்பு முறைகள் 

   இயற்கை வழி வேளாண்மை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு 

என தற்சார்பு விவசாயத்தை ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த புரிதல் கொண்ட பயிற்சிகளும் அதோடுகூடவே.. 

குழு சார்ந்த வேளாண்மை குறித்து நேரடி களப்பயிற்சியினை (ஆரோ ஆர்ச்சர்ட் & Solitude Farm)– பண்ணை பார்வையிடல் வாயிலாக பயிற்றுவித்து... 

மேலும், தொழில் திட்டமிடல் – இயற்கை வழி விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பற்றிய விவரங்களை பங்கேற்பாளர்களிடத்தில் கொண்டுசேர்த்தது இப்பயிற்சி. 

நிறைவாக கருத்து கேட்டல் & களப்பயணம் – திட்டமிடல் பற்றிய ஆலோசனைகளும் இடம்பெற்றது. 

பயிற்றுனர்கள்: 

திரு.பார்த்தசாரதி, திரு.ராஜகணேஷ், திரு.கிறிஸ்டியன், திரு.ராதாகிருஷ்ணன், திரு.சத்யராஜ், திரு.கிருஷ்ணா, திரு.லக்ஷ்மிநாராயணன் & Ms.சாவித்திரி.