நீடித்த வாழுமைக்கான நிறுவனத்தின் அடுத்த படைப்பாக நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் குறியீடுகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை சென்ற வருடம் உலகத்தின் 192 நாடுகள் ஒப்புக்கொண்டன. இவற்றை இன்னமும் நமது ஊருக்கும், வளர்ச்சிக்கும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று பலரும் சிந்திக்க ஆரம்பிக்கும் காலம் முதல், இந்த இலக்குகளை தமிழில் முதலில் மொழிபெயர்த்து இது நமக்கு எந்த அளவிற்கு உகந்தது என்பதனை உணரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நமது நிறுவனத்தில் திரு. ராஜகணேஷ் அவர்கள் இந்த மொழிபெயர்ப்பை செய்துள்ளார். திரு. சத்யராஜ் அவர்கள் இதனை அழகாக வடிவமைத்துள்ளார்.